இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தான் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சச்சின் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு, அறிவித்துள்ளார்.
லேசான கொரோனா அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று உறுதியானதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘குடும்பத்தில் வேறு யாருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை’ அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும், உறுதுணையாக இருந்து, ஆலோசனைகள் வழங்கிய மருத்துவர்களுக்கும் சச்சின் நன்றி தெரிவித்துள்ளார்.
‘அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்றும் டெண்டுல்கரின் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த சாலை விழிப்புணர்வு ‘இருபது 20’ கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு டெண்டுல்கர் கேப்டனாக பங்கேற்று சாம்பியனானதும் குறிப்பிடத்தக்கது.
— Sachin Tendulkar (@sachin_rt) March 27, 2021