April 29, 2025 17:27:14

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியப் பிரதமருக்கு பங்களாதேஷில் செங்கம்பள வரவேற்பு

Photo:Narendramodi/Twitter

இரண்டு  நாட்கள் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்களாதேஷ் சென்றுள்ளார்.

சுமார் 15 மாதங்களுக்குப் பின்னர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு பங்களாதேஷ்  டாக்கா விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் அங்கு சென்றுள்ளார்.

அதேவேளை பங்களாதேஷ் தேசிய தின கொண்டாட்டங்களிலும் மற்றும் வேறுசில நிகழ்வுகளிலும் பங்கேற்கும் பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் அப்துல் ஹமீதையும் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதமரின் இரண்டு நாள் பயணத்தின்போது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா கூறியுள்ளார்.

இதேவேளை கொரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு தாம் மேற்கொள்ளும் முதல் பயணமாக  நெருங்கிய நட்பு நாட்டுக்கு செல்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.