January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மும்பை மருத்துவமனை தீ விபத்தில் 10 பேர் பலி!

இந்தியா மும்பையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்  மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பையின் பஹன்அப் பகுதியில் டிரீம்ஸ் மால் என்ற வணிக வளாக கட்டடத்தின் மேல்தளத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது.

இங்கு கொரோனா நோயாளிகள் உட்பட பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அந்த வணிக வளாக கட்டடத்தின் முதல் தளத்தில் திடீரென ஏற்பட்ட தீ மேல் தளத்திற்கும் பரவியுள்ளது.

இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகள் உட்பட பலர் சிக்கிக் கொண்டதாகவும், இதன்போது 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்திற்கு மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வருத்தம் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்குச் சென்று நேரில் ஆய்வு செய்த  அவர், தீ விபத்திற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.