April 26, 2025 16:02:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜெனிவாவில் இந்தியாவின் நிலைப்பாடு; தமிழருக்கு மத்திய அரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சக்கட்டம்’

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தமை தமிழுக்கும் தமிழருக்கும் மத்திய அரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சக்கட்டம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவருடைய டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு.

தமிழுக்கும் தமிழருக்கும் மத்திய அரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சக்கட்டம் இது என அவர் மேலும் பதிவிட்டுள்ளார்.

வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்ததற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.