November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அஸ்ட்ரா செனகா’ தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா!

‘ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா’ கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் குறித்த தடுப்பூசிக்கான கேள்விகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு ஏற்றால் போல் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் காணப்படும் சிக்கல் நிலைமைகளை கருத்திற்கொண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில், நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை ஏற்றுவதற்கு சுகாதாரத்துறை தீர்மானித்துள்ளது.

இதனால் இந்தியாவிற்கு அதிகளவில் தடுப்பூசிகள் தேவைப்படுவதால், அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை எதிர்வரும் ஏப்ரல் இறுதி வரையில் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 70 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 60 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.