January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழகத்தில் கொரோனா பரவலின் 2 ஆவது அலை உருவாகியுள்ளது’: சுகாதாரத்துறை

பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் புதிய வகை மரபணு மாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.

இரண்டாவது அலைக்கும் இதற்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து  தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஆங்காங்கே கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

முன்னர் இருந்த பல முக்கிய விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாலும், தற்போது தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் காரணத்தினால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கட்டாயம் தமிழக மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.