May 31, 2025 17:13:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரசாரத்திற்கு நடுவே நடிகர் சிவாஜியின் வீட்டிற்கு சென்ற குஷ்பு

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் குஷ்பு தனது பிரசாரத்திற்கு நடுவே,மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிற்கு திடீரென சென்றுள்ளார்.

அங்கு சென்ற குஷ்புவிற்கு, நடிகர் பிரபு உள்ளிட்ட அவரது குடும்பத்தார் வரவேற்பளித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் சிவாஜி கணேசன் வீட்டிற்கு சென்ற குஷ்பு குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், நடிகர் திலம் சிவாஜி கணேசனின் புகைப்படம் அருகே நின்று அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் பா.ஜ.க.வில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை குஷ்பு
சிவாஜி கணேசனின் இளைய மகன் பிரபுக்கு ஜோடியாக பல ஹிட் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2006 ஆம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய குஷ்பு கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் குஷ்பு,தனது பிரசாரம் தொடர்பான புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நடிகை குஷ்பு மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் வீட்டிற்கு திடீரென சென்றுள்ளார்.