வெள்ளித்திரையில் மிகப்பெரும் வில்லனான சோனு சூட் ,நிஜ வாழ்வில் மக்களிடையே ஹீரோவாகிய தருணம் தான் இந்த கொரோனா காலம்.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தனது விமானம் ஒன்றில் நடிகர் சோனு சூட் படத்தை பதித்து அவரது கொரோனா கால உதவிகளை பெருமைப்படுத்தியுள்ளது தற்போது வைரல் ஆகியுள்ளது .
சோனு சூட்டை பெருமைப்படுத்தும் விதமாக ,ஸ்பைஸ் ஜெட் விமானம் தனது போயிங் விமானத்தில் சோனு சூட்டின் முகத்தை பதித்து நன்றி தெரிவித்து வாழ்த்தி உள்ளது.
கொரோனா பரவலின் போது சோனு சூட் பல லட்சம் இந்தியர்களுக்கு உதவியிருக்கிறார்.அவரின் மகத்தான முயற்சிகளுக்கு ஸ்பைஸ் ஜெட்டின் நன்றி என டுவிட்டர் பக்கத்தில் ஸ்பைஸ்ஜெட் பதிவிட்டு இருக்கிறது.
கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது.
இதனையடுத்து மார்ச் 22 ஆம் திகதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டது .
இதனால் இடம்பெயர்ந்து ஆங்காங்கே கூலித் தொழிலில் ஈடுபட்டிருந்த லட்சக்கணக்கான வட மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தத்தமது ஊருக்கு நடந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இதனால் பல சிரமங்களை சந்தித்த புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு மிகப் பெரும் உதவி செய்தார் நடிகர் சோனு சூட்.
மேலும் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மாணவர்களை சொந்த செலவிலேயே விமானத்தில் இந்தியா கொண்டு வந்து சேர்த்துள்ளார் அவர்.
மேலும், டுவிட்டரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உதவி கேட்ட அனைவருக்கும் அவர் உதவி செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது சோனு சூட்டை பெருமைப்படுத்தும் விதமாக ஸ்பைஸ் ஜெட் விமானம் தனது போயிங் விமானத்தில் சோனு சூட்டின் முகத்தை பதித்து அவரின் மகத்தான உதவிகளுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறது.
இதனை சோனு சூட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது நெகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.