தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி புதுவைக்கு வருகை தரவுள்ளார்.
எதிர்வரும் 30 ஆம் திகதி பாண்டிச்சேரிக்கு வரும் பிரதமர் மோடி, இந்திய தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க, பா.ஜ.க ஆகியவை இணைந்து பாண்டிச்சேரியில் இந்திய தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகின்றன.
ஆங்கிலோ பிரஞ்ச் பஞ்சாலை திடலில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மோடியுடன் இணைந்து என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ரங்கசாமி, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.