November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான கடற்பகுதியை நீந்திக் கடந்து சியாமளா கோலி சாதனை

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை கடல் பகுதியை நீந்திக் கடந்து, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 48 வயதான பெண் சியாமளா கோலி சாதனை படைத்துள்ளார்.

தலைமன்னாரில் இருந்து நேற்று அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவர் நீந்த ஆரம்பித்துள்ளதோடு, மாலை 5 மணி 50 நிமிடத்தில் நிறைவு செய்துள்ளார்.

தமிழகத்தையும், இலங்கையையும் பாக்கு நீரிணை பிரிக்கின்றதோடு, தமிழகத்தில் ஆழம் குறைந்த, பாறைகளும், ஆபத்தான ஜெலி மீன்களும் நிறைந்த கடற்பகுதியே இது.

இந்நிலையில், பல்வேறு நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்த தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த சியாமளா கோலி சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாக்கு நீரிணையை நேற்று நீந்திக் கடந்துள்ளார்.

இதன்மூலம் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த 13 ஆவது நபராகவும், இந்தியாவின் முதல் பெண்ணாகவும் சியாமளா சாதனை படைத்துள்ளார்.

பாக்கு நீரிணையை இலங்கையின் வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்பவர் முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு நீந்திக் கடந்துள்ளார்.