
ஊர்ந்து போய் முதல்வராக நான் என்ன பல்லியா? பாம்பா? நடந்து சென்றுதான் முதல்வரானேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மு.க.ஸ்டாலினுக்கு பதிலளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் புவனகிரியில் நடைபெற்ற பிரசாரத்தின் போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இங்கு தொடர்ந்து பேசிய அவர்;
தி.மு.க தலைவர் ஸ்டாலின் பல பிரசார மேடைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஊர்ந்து சென்றுதான் முதலமைச்சர் பதவியை பிடித்தார் என கூறிவருகிறார் .இதற்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் ,ஊர்ந்து செல்ல நான் என்ன பல்லியா, பாம்பா என கேள்வி எழுப்பியுள்ளார்?
விவசாயிகள் கஷ்டத்தை நான் உணர்ந்தவன்.வெயில், மழை, இரவு, பகல் என எதையும் பாராமல்,ரத்தம் வியர்வை சிந்தி உழைக்கும் ஒரே தொழில் விவசாயம் தான். இதைப்பற்றி ஸ்டாலினுக்கு சிந்திக்க தெரியாது.
விவசாயி, விவசாயி என எடப்பாடி குதிப்பதாக ஸ்டாலின் சொல்லுகிறார். நான் குதித்தால் அவருக்கு என்ன?.
நான் ஊர்ந்து போய் முதல்வராக பல்லியா? பாம்பா? நான் நடந்து சென்றுதான் முதல்வரானேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.