January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மோடி சொன்ன புதிய இந்தியாவை நானும் தேடிக்கொண்டே இருக்கிறேன்’

தமிழகத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் அ.தி.மு.க. அடமானம் வைத்துள்ளதாக தெரிவித்துள்ள தி.மு.க இளைஞர் பிரிவு செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,மோடி சொன்ன புதிய இந்தியாவை நானும் தேடிக்கொண்டே இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மோடி அலை வீசினாலும், தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு முட்டைதான்.இரட்டை இலைக்கு போடுகிற ஒவ்வொரு வாக்கும் பா.ஜ.க.விற்குதான் செல்லும் எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார்.

அவர்கள் வென்றால் கூவத்தூருக்கோ, பா.ஜ.க.விற்கோ ஓடிவிடுவார்கள் என்பதை உணர்ந்து தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும்.

500, 1000 ரூபாய் போல அ.தி.மு.க, பா.ஜ.க.வை செல்லாக்காசாக்க வேண்டும்.புதிய நாடாளுமன்ற கட்டிடம் ரூ.10,000 கோடியில் கட்டுகிறார் மோடி. அது என்ன அவர் அப்பா வீட்டு பணமா?

மோடி முட்டி போட சொன்னாலும், குட்டிக்கரணம் அடிக்க சொன்னாலும் எடப்பாடி பழனிசாமி செய்வார். அடிமை அ.தி.மு.க, பாசிச பா.ஜ.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

இந்தியாவிலேயே மோடியை எதிர்ப்பது ஸ்டாலின் மட்டும்தான் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.