ஏப்ரல் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள தமிழகம் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.
கடந்த 12ஆம் திகதி ஆரம்பமான வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பமான நிலையில், ஆளும் கட்சி, எதிர்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்து வேட்பாளர்களை தெரிவு செய்து வேட்புமனு தாக்கலில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வந்தனர்.
இதன்படி 4502 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறவுள்ளதுடன் வேட்புமனுக்களை மார்ச் 22 ஆம் திகதிக்குள் வாபஸ் பெறவும் முடியும்.
சட்ட மன்றத் தேர்தலுக்காக 3,760 ஆண்களும், 739 பெண்களும், திருநங்கைகள் இருவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்