January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொள்ளைக் கும்பலுக்கு மாற்றாக நேர்மைக்கு வாக்களியுங்கள்’

ஊழலுக்கு மாற்றாக மற்றொரு ஊழலை தேர்ந்தெடுக்காதீர்கள் என கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜ்குமாரை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய கமல்ஹாசன், மாறி மாறி பொய் பேசி,ஐம்பது ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் தமிழகத்தை கெடுத்துவிட்டார்கள்.

ஊழலுக்கு மாற்றாக மற்றொரு ஊழலை தேர்வு செய்யாதீர்கள்.கமிஷன் கிடைக்காத எதையும் இவர்கள் செய்வதில்லை.கொள்ளை கும்பலுக்கு மாற்றாக நேர்மைக்கு மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்களியுங்கள்.

தாங்கள் வெற்றி பெற்றால் என்ன செய்யப் போகிறோம் என பேசுவதற்கு கூட துண்டு சீட்டை வைத்துக் கொண்டு படிக்கிறார்கள்.

பொய் சொல்வதற்கு நிறைய ஞாபகசக்தி தேவை என்பதால்,மறதியால் எதையாவது பேசி விடுவோமோ என்ற அச்சத்தால் தான் அவர்களுக்கு துண்டு சீட்டு தேவைப்படுகிறது.

வருமான வரித்துறையினர் மூலம் சோதனை நடத்தி, எங்களை அச்சுறுத்த பார்க்கின்றனர் எனவும் கமல்ஹாசன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.