தி.மு.க. ஆட்சியில் தான் ஊழல் என்ற வார்த்தையே உருவானது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
வேதாரண்யத்தில் போட்டியிடும் அமைச்சர் ஓ.எஸ் மணியனை ஆதரித்து பிரசாரத்தை முடித்துக் கொண்டு நாகை வந்த முதல்வர் அங்கு போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரான தங்க கதிரவனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சாதி ,மதச் சண்டைகள் கிடையாது எனவும் இந்தியாவிலேயே தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாகவும் முதலமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க சிறுபான்மையின மக்களுக்கு எதிரான கட்சி என்ற போலித் தோற்றத்தை சிலர்
வாக்குக்காக உருவாக்கி வருகிறார்கள்.சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது அ.தி.மு.க.தான்.
நாங்கள் தான் சிறப்பான முறையில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.
அ.தி.மு.க ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் பேசி வருகிறார்.
நாங்கள் செய்ததை சொல்கிறோம்,செய்யப்போவதை சொல்கிறோம்.வீராணம் ஏரி, பூச்சி மருந்து ஊழல், அரிசி ஊழல் என தி.மு.க.வின் செயல்கள் எல்லாம் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து உள்ளது.
தி.மு.க குடும்ப கட்சி, கருணாநிதி, அவருக்குப்பின் ஸ்டாலின், அவருக்குப்பின் உதயநிதி என்று குடும்ப அரசியல் செய்து வருகிறார்கள்.இவர்கள் என்ன அரச பரம்பரையா?.தி.மு.க ஆட்சியில் தான் ஊழல் என்ற வார்த்தையே உருவானது. தி.மு.க தான் ஊழல் கட்சி என முஹலமைச்சர் விமர்சித்துள்ளார்.