கொரோனா 2 ஆவது அலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
2 ஆவது அலை உருவாக நாம் தான் காரணம் என கூறியுள்ள அவர், இந்தியாவில் கொரோனா இல்லை என நினைத்து விதிமுறைகள் கடைப் பிடிக்கப்படுவதில்லை என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலை தாக்கிய நிலையில், தற்போது 2021 ஆம் ஆண்டு கொரோனா 2 ஆவது அலை இந்தியாவில் தாக்க தொடங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தினமும் 50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினால்தான் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் ஒரே தினத்தில் 35,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், 172 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தினந்தோறும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை 100 ஐ விட குறைவாக இருந்த நிலை மாறி, கடந்த சில நாட்களாக 100-க்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு நாளும் உயிரிழப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.