
தோல்வி என்ற வார்த்தையே தமது அகராதியில் இல்லை என குஷ்பு தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் வள்ளுவர் கோட்டத்தில் இருந்து நுங்கம்பாக்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் வரை மேளதாளம் முழங்க,மயிலாட்டம், ஒயிலாட்டம் என கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார் குஷ்பு .
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கேட்கவில்லை என்றாலும், அவர் தனக்கு ஆதரவு அளிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக குஷ்பு தெரிவித்திருக்கிறார்.
மேலும் தோல்வி என்ற வார்த்தையே தமது அகராதியில் இல்லை எனவும் குஷ்பு கூறியிருக்கிறார்.
சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி பாரதிய ஜனதா கட்சி என பொய் பரப்புரை செய்யப்படுவதாகவும் அவர் இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளார்.