
கொரோனா பரவலுக்கு பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுவந்த பிரதமர் நரேந்திர மோடி,கொரோனா பரவலுக்கு பின்னர் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இருந்தார்.
தற்போது ஓராண்டுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி பங்களாதேஷ் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பங்களாதேஷின் சுதந்திர தின பொன்விழாவுடன் இணைந்து தேச தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவிருக்கிறது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் எதிர்வரும் மார்ச் 26, 27 ஆகிய திகதிகளில் அங்கு நடைபெறும் நிகழ்வுகளில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார் .
இந்தப் பயணத்தின் போது பங்களாதேஷுடன் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.
2020 மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இதனையடுத்து வெளிநாடுகளுக்கு செல்லாமல் நாட்டிலேயே இருந்தார் பிரதமர்.
இந்தியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை தவிர்த்து வந்த பிரதமர் தற்போது பங்களாதேஷ் செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது.