January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் வீழ்த்துவதே எமது கொள்கை”

Photo : twitter/Vijayakant
“தி.மு.க.வு.ம் அ.தி.மு.க.வும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை” என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்க சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில்,தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில்,கோயம்பேட்டில்,தே.மு.தி.க அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தீய சக்தியான தி.மு.க.வையும், துரோக கட்சியான அ.தி.மு.க.வையும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதுதான் எங்களின் ஒரே கொள்கை.

மேலும் சசிகலாவின் ஆதரவு தங்களது கூட்டணிக்கு உண்டு எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில், ஊழலற்ற வெளிப்படையான நல்லாட்சியை  உருவாக்கி தருவதற்கான கூட்டணிதான் அ.ம.மு.க கூட்டணி.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தி.மு.க.வை வீழ்த்துவதே தங்கள் நோக்கம் என கூறிவந்த டிடிவி தினகரன், தற்போது துரோகியாகிய அ.தி.மு.க.வை ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, அ.தி.மு.க கூட்டணியில் இருந்த தே.மு.தி.க தொகுதிகள் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட  பிரச்சினை காரணமாக அக்கூட்டணியில் இருந்து விலகி அ.ம.மு.க.வில் சேர்ந்தது.

தற்போது அ.ம.மு.க கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின்  முதல்வர் வேட்பாளரான டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.