எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அசையா சொத்துக்களின் மதிப்பு 4 கோடி 68 இலட்சம் ரூபாவாகும். அசையும் சொத்துக்களின் பெறுமதி 2 கோடி ரூபாவாகும். மொத்தம் 6 கோடி 70 இலட்சம் ஆகும்.
அதேவேளை திமுக தலைவரும் வேட்பாளருமான ஸ்டாலினின் சொத்து மதிப்பானது அசையா சொத்துகளின் மதிப்பு 3 கோடி 63 இலட்சமாகும். அசையும் சொத்துகளின் மதிப்பு 5 கோடி 25 ரூபாவாகும். அதற்கமைய மொத்த சொத்து மதிப்பு 8 கோடிய 88 இலட்சம் ஆகும்.
இதனையடுத்து திமுக சார்பில் போட்டியிடும் ஸ்டாலினின் மகனான உதயநிதியின் அசையும் சொத்து 22.28 கோடி ரூபாவாகும். அசையா சொத்து 6.54 கோடி ரூபா. மொத்த சொத்து 28.82 கோடி ரூபாவாகும்.
அத்தோடு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு 176 கோடி 93 இலட்சமாகும். மேலும் லண்டனில் உள்ள 2 கோடி 50 இலட்சம் மதிப்பிலான வீடும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரும், இரண்டே முக்கால் கோடி மதிப்பிலான லெக்சாஸ் காரும் அடங்குகிறது.
மேலும் அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் சொத்து மதிப்பு 10 கோடி 87 இலட்சமாகும்.
அதேப்போல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அசையும் சொத்தின் மதிப்பு 94 இலட்சம். அசையா சொத்துக்களின் மதிப்பு 87 இலட்சம் ஆகும்.
இதுவே தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனு வழியாக தெரியவரும் சொத்து மதிப்புத் தொகை.