Photo : Twitter/stalin
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஏற்கனவே மு க ஸ்டாலின் எட்டுமுறை சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்டுள்ளார். இரண்டு முறை மட்டுமே அவர் தோல்வி அடைந்திருக்கிறார்.
அதேபோல் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.
மேலும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக தேசிய மகளிர் அணித்தலைவி வானதி ஸ்ரீனிவாசன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கடந்த முறை கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தாலும், தொகுதி மக்களுக்குத் தேவையான திட்டங்களைத் தான் கொண்டு சேர்த்து இருப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.
அத்தோடு, திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் அமமுகவின் டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அதேபோல் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார் திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்.