(FilePhoto)
ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் எடப்பாடி பழனிச்சாமியிடம் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
அண்மையில் விஜயகாந்தின் தே.மு.தி.க, அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘தே.மு.தி.க.வை பக்குவம் இல்லாத கட்சி’ என்று குறிப்பிட்டிருந்தார்.
முதலமைச்சரின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயேசெய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘ஒரு வெற்றிக் கூட்டணியை அமைப்பதில் ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை எனவும் அவரால் ஒரு கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக மாற்றமுடியவில்லை’ எனவும் விமர்சித்துள்ளார்.
மிகவும் பக்குவமாகத்தான் செயல்பட்டோம். ஆனாலும் விடாப்பிடியாக 13 சீட்டுக்கள்தான் என அ.தி.மு.க உறுதியாக கூறி விட்டதாகவும்’ பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் அ.தி.மு.க தலைமையிடம் தெளிவாக எடுத்துக் கூறியும் அவர்கள் குறிப்பிட்ட சீட்டுக்களைதான் கொடுக்க முடியும் என்றார்கள். இல்லையென்றால் உங்களுக்கு தேவையானதை செய்யுங்கள் எனக்கூறி விட்டார்கள்.
இதனையடுத்து மிகவும் கனத்த இதயத்துடன் கூட்டணியில் இருந்து விலகுவதாக விஜயகாந்த் அறிவித்தார். பொய் புகார்களை கூறி அ.தி.மு.க எங்களை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டது எனவும் இதன்போது பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.