January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கமல்ஹாசனின் கார் கண்ணாடியை உடைத்தவர் கட்சித் தொண்டர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்!

(FilePhoto)

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் கார் கண்ணாடியை உடைத்த நபரை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது காந்திரோடு பகுதியில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு கமல்ஹாசன் வெளியேறும்போது நபரொருவர் அவரின் காரை வழிமறித்த நிலையில், கமல்ஹாசனின் பாதுகாவலர்கள் அவரை தடுத்து அப்புறப்படுத்தினர்.

எனினும் அந்த நபர் மீண்டும் கார் மீது ஏறி கமல்ஹாசன் அமர்ந்திருந்த முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளார். இதில் கண்ணாடி சேதமடைந்துள்ளது.

இதனையடுத்து அங்கிருந்த கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் தாக்குதல் நடத்திய நபரை பிடித்து அடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.