அ.ம.மு.க கூட்டணியில் இணைந்துள்ள விஜயகாந்தின் தே.மு.தி.க போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
மொத்தமாக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இடம்பெற்றுள்ளது.
இம்முறை சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் போட்டியிடவில்லை என கூறப்படுகிறது.
அதற்கு பதிலாக விருத்தாச்சலம் தொகுதியில் இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்தின் மனைவியும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவார் என வேட்பாளர் பட்டியலில் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2011-ல் அ.தி.மு.க கூட்டணியில் வென்ற 29 இடங்களில் 12 இடங்கள் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி விருத்தாச்சலம் தொகுதியில் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
தே.மு.தி.க துணைச் செயலாளர் பார்த்தசாரதி விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த வேட்பாளர் பெயர் பட்டியலில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.