January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அ.ம.மு.க – தே.மு.தி.க இடையே கூட்டணி ஒப்பந்தம் முடிவானது

தமிழக சட்டமன்றத் தேர்தலில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், விஜயகாந்தின் தே.மு.தி.க.வும் இணைந்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக விஜயகாந்தின் தே.மு.தி.க தனித்துப் போட்டியிடப் போவதாக கூறி வந்த நிலையில், தற்போது டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க உடன் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கப் போவதாக அறிக்கை வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் தே,மு,தி,க,விற்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமாகி இருக்கிறது.

இதனால் ஏப்ரல் 6 ஆம் திகதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் பலமுனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது .

அ.தி.மு.க.வில் இருந்து விலகிய விஜயகாந்தின் தே.மு.தி.க திடீரென டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .

ஏற்கனவே அ.தி.மு.க.வுக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கும் இடையே உட்கட்சிப் பூசல்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன.

இந்நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து விலகிய தே.மு.தி.க ,டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க உடன் இணைந்திருப்பது அ.தி.மு.க.வுக்கு இந்த தேர்தலில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவே அமைவதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.