January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திமுக தேர்தல் அறிக்கை பெரிதாக இருந்தாலும் உள்ளே ஒன்றும் இல்லை எனச் சாடுகிறார் அமைச்சர் உதயகுமார்

திமுகவின் தேர்தல் அறிக்கை பார்க்கப் பெரிதாக இருந்தாலும், ‘காலி பெருங்காய டப்பா’ போன்று உள்ளே பார்த்தால் ஒன்றும் இருக்காது என அதிமுக வேட்பாளரும் தமிழக வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் சாடியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலையொட்டி மதுரை மாவட்டம்- குன்னத்தூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமது வாரிசுகளையும், சொத்துக்களையும் காப்பாற்றுவதற்காக மாற்றுக் கட்சியினர் வாக்கு கேட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதேநேரம், தாம் ஆட்சிக்கு வருவது மக்களைக் காப்பாற்ற மட்டுமே என்றும் அம்மா வீட்டு திட்டத்தின் கீழ் வீடில்லாத அனைவருக்கும் நிலம் ஒதுக்கி, வீடு கட்டித் தரப்படும் என்றும் அமைச்சர் உதயகுமார் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தின் முதலமைச்சர் மக்களின் பல்வேறு கடன்களையும் தள்ளுபடி செய்வதற்கு அறிக்கை வெளியிடவில்லை என்றும் அரச ஆணையை வெளியிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.