சினிமா எனது தொழில் ஆனால் அரசியல் எனது நோக்கம் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
நிகழ்வு ஒன்றில் பேசிய கமல்ஹாசன் ஊழலற்ற ஆட்சியை கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
எம்.எல்.ஏ ஆன பின்னர் தான், எம்.ஜி.ஆர் சுமார் 50 படங்களில் நடித்தார் எனவும் , “சினிமா எனது தொழில், ஆனால் அரசியல் எனது நோக்கம்” , வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
காந்தி, காமராஜர் போன்றோர் ஏழைகளின் தலைவராக இருந்ததாகவும் நாங்களும் அப்படித்தான் எனவும் மக்கள் நீதி மய்ய தலைவர் தெரிவித்திருக்கிறார் .
அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள் என ஒட்டுமொத்தமாக கூறிவிட முடியாது. அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் நல்ல முன்னுதாரணம் எனவும் ,திமுக, அதிமுகவில் சில நல்லவர்களும் இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
தனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்து உள்ளதாகவும் தேர்தலில் தோற்றாலும் அரசியலில் தொடர்ந்து ஈடுபட போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.