January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

500 க்கும் அதிகமான வாக்குறுதிகளுடன் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியானது

தமிழக சட்டசபைத் தேர்தலில் களம் இறங்கியுள்ள பிரதான கட்சிகளில் ஒன்றான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அடங்கிய இந்த தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மு.க.ஸ்டாலின், ‘பொதுவாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்றால் அது தேர்தல் கதாநாயகன் என்று சொல்வதுண்டு.

நாங்கள் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலை சிலர் கதாநாயகன் என்றுதான் இன்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைய தினம் 2-வது கதாநாயகனை நான் இப்போது தேர்தல் அறிக்கை மூலமாக வெளியிடுகிறேன். தி.மு.க. தோன்றிய காலத்தில் இருந்து தேர்தல் அறிக்கையை வெளியிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறது.

பல்வேறு தலைமுறைகளை தாண்டியும் இவை பேசப்படும்.தமிழகத்தின் நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு இந்த தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தேர்தல் அறிக்கையில் உள்ள சில வாக்குறுதிகள்,