(Photo:Udhaystalin/Twitter)
தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
அதேநேரம், திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்முறையாக போட்டியிடுகிறார்.
ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் திமுக 173 நபர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்டாலின் கடந்த 2011 மற்றும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
அதனால் இந்த முறையும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து, அதிமுக கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் ஏ.வி.ஏ கசாலி என்பவர் போட்டியிடுகிறார்.
அத்தோடு இந்தமுறை சட்டமன்றத்தேர்தலில் திமுக சார்பில் 12 பெண் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளமை சிறப்பம்சமாகும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் இம்முறை 9 ஆவது முறையாக போட்டியிடுவதுடன் அவரது மகன் உதயநிதி முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காண்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.