மக்கள் நீதி மய்யத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் முழுவதுமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ் சென்னை அண்ணாநகர் தொகுதியிலும் மக்கள் நீதி மையம் கட்சியிலுள்ள நடிகை ஸ்ரீப்ரியா மயிலாப்பூர் தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல்முறையாக தேர்தலில் களமிறங்கும் கமல்ஹாசன்,கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுகிறார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்.
மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன். வெல்லப் போவது நானல்ல. தமிழகம்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 12, 2021
தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கலும் தொடங்கியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.