June 11, 2025 22:39:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘முதல்வர் காலில் விழ வேண்டிய தேவை தே.மு.தி.க.வுக்கு இல்லை’

‘சீட்டுக்காக முதல்வர் காலில் விழ முடியாது என’ விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் தே.மு.தி.க தொண்டர்களின் மத்தியில் உரையாற்றும்பொழுது தெரிவித்துள்ளார்.

2011ல் இருந்து எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி அ.தி.மு.க கூட்டணியில் தொடர்ந்த ஒரே கட்சி தே.மு.தி.க.இதனை அ.தி.மு.க .வின் அமைச்சர்களே பல இடங்களில் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்கள் என்றும் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர்;

‘2011 இல் அ.தி.மு.க ஆட்சி அமைக்க நாங்களே முக்கிய காரணம் என்பதை மறந்து விடக்கூடாது.அ.தி.மு.க.வில் எங்களுக்கு போதுமான மரியாதை இல்லாததாலும் கேட்ட தொகுதிகளை ஒதுக்காததாலும் தான் நாங்கள் அதிலிருந்து வெளியேறினோம்.

அந்தவகையில்,இந்த முறை தேர்தலில் முழு பலத்துடன் வென்று 2011 இல் இருந்த வாக்கு சதவீதத்தை நிச்சயம் எட்டிப் பிடிப்போம்.

அதேநேரம், போதுமான சீட்டு வேண்டுமென்று முதல்வர் காலில் விழ முடியாது என்றும் முடிந்த அளவு இந்த விடயத்தில் பொறுமை காத்ததாகவும்’ விஜயபிரபாகரன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.