January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மாநிலக் கட்சிகளிடம் பா.ஜ.க கெஞ்சுவது பொறுக்க முடியவில்லை’

‘அகில இந்திய கட்சியான பா.ஜ.க, மாநிலக் கட்சிகளிடம் சீட்டுக்காக கெஞ்சுவது பொறுக்க முடியவில்லை’ என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்காக சென்றிருந்த வேளையில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர்;

‘பா.ஜ.க தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டிருக்க வேண்டும்.சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க 2 அல்லது 3 தொகுதிகளில் வெற்றி பெறலாம்.இல்லாவிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமலும் போகலாம்.

கடந்தமுறை தேர்தலிலும் எந்த தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெறவில்லை.இருந்தபோதிலும் ஒரு அகில இந்திய தேசிய கட்சி,மாநிலக் கட்சிகளிடம் காக்காய் பிடித்து 5,10,20 சீட்டுகளுக்காக கெஞ்சுவது தாங்க முடியவில்லை.அதனால் தான் ஒதுங்கி இருக்கிறேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.