திமுக, அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே மக்கள் நீதி மய்யத்தின் பணி என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
திமுக, அதிமுகவிடம் இருக்கும் பணம், பலம் தமக்கு இல்லை என்பதை தைரியமாக ஏற்று கொள்வதாகக் கூறியுள்ள அவர், அவர்களிடம் இல்லாத நேர்மை தங்களிடம் இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை தமிழகச் சட்டமன்ற தேர்தலில், மக்கள் நீதி மய்யம் மூன்றாவது அணியாக போட்டியிடுகிறது.
மக்கள் நீதி மய்யத்துடன், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், இந்திய ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.
இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் மக்கள் நீதி மய்யத்தின் 70 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலைக் கமல் வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் இது. வெற்றி எமதே! pic.twitter.com/MX5fC04wn1
— Kamal Haasan (@ikamalhaasan) March 10, 2021
இதேவேளை, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதியின் விபரம் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.