November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

22 ஆயிரம் கோடி ரூபாயில் நவீன ரக ட்ரோன்களை வாங்க இந்தியா தீர்மானம்

வான்வழி பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு இந்தியா அமெரிக்காவிடமிருந்து அதி நவீன இராணுவ ட்ரோன்களை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதற்கமைய அமெரிக்காவிடம் இருந்து 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 30 இராணுவ ஆயுத ட்ரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்திருக்கிறது.

இந்த இராணுவ ட்ரோன்கள் தொடர்ந்து 48 மணி நேரம் பறக்கக்கூடியவை என கூறப்படுகிறது. சுமார் 1700 கிலோ எடையுள்ள இந்த ட்ரோன்கள், ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தவை எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவின் சாண்டியாகோவில் உள்ள ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து இந்த அதி நவீன Mq-9b பிரிடேட்டர் ட்ரோன்கள் வாங்கப்பட உள்ளன.

சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான உறவில் தொடர்ந்தும் பதற்றம் நீடித்து வரும் நிலையில், தென் சீனக் கடலில் கப்பல்கள் நடமாட்டத்தையும், எல்லைகளில் அத்துமீறலையும் தடுக்க இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

இது தென்னிந்திய பெருங்கடலில் சீன போர்க்கப்பல்களை சிறப்பாக கண்காணிக்கும் திறனை இந்திய கடற்படைக்கு வழங்கும்  எனவும் தெரிவிக்கப்படுகின்றது.