Photo: MkStalin/Twitter
திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று அதிகமாகவே பரவி வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் என அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசார கூட்டங்களில் கலந்துகொள்ளும் முக ஸ்டாலின் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார்.
இதன்போது ஸ்டாலின் ”குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி” என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு ”தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#CovidVaccine முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன்.
குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம். pic.twitter.com/45L1iGD1F6
— M.K.Stalin (@mkstalin) March 9, 2021