July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய 3 கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளித்துள்ளன

(FilePhoto)

அதிமுகவில் இருந்து விலகிய கருணாஸின் முக்குலதோர் புலிப்படை, தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, மற்றும் தனியரசின் கொங்கு இளைஞர் பேரவை ஆகியன திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளன.

எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி பல்வேறு அதிரடி அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் நிகழ்ந்து வருகின்றன.

அந்தவகையில், கருணாஸ், தமிம்முன் அன்சாரி, தனியரசு ஆகியோர் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளாக விளங்கிய, மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கட்சி கருணாஸ், கொங்கு இளைஞர் பேரவை தனியரசு ஆகியோர், இந்த முறை திமுக பக்கம் சாய்ந்துள்ளனர்.

திமுக கூட்டணியில், காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே அதிமுகவிலிருந்து விலகி திமுகவிற்கு ஆதரவு அளித்து இருக்கும் இந்த மூன்று கட்சியினருக்கும், தொகுதி பங்கீடும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முக்குலத்தோர் புலிப்படை கட்சியை அதிமுக அரசு புறந்தள்ளிவிட்டதாகவும் கட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதாலும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்றும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.