November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழகத்தில் 3 வது அணிக்கு சாத்தியமில்லை’

தமிழகத்தில் 3 வது அணிக்கு சாத்தியமில்லை எனவும் ,எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது எனவும் பா .சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தி.மு.க கூட்டணியில் தொடர்வதுதான் தமிழகத்திற்கு நல்லது எனவும் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீட்டில் தி.மு.க.வுக்கும் காங்கிரஸு க்கும் இடையே இழுபறி நிலை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியது.

இதனையடுத்து தமிழகத்தில் மூன்றாவது அணி எதையும் சாதித்ததாக வரலாறு இல்லை.இதனால் கமல் உடன் கூட்டணி சேர்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை.

தி.மு.க கூட்டணியில் ஏற்பட்ட தொகுதிப் பங்கீடு இழுபறியில், காங்கிரஸ் கட்சி குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அக்கறையுடன் பிரச்சார மேடைகளில் பேசி வந்தார்.

இதனையடுத்து காங்கிரஸில் இருந்த சிலர் மக்கள் நீதி மய்யத்தில் கூட்டணி வைக்க ஆதரவு தெரிவித்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் இன்று தி.மு.க கூட்டணிக்கும் காங்கிரஸு க்கும் இடையே தொகுதி பங்கீடு உறுதியாகி கையெழுத்துமாகியது.

இதில் தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான பா. சிதம்பரம் இந்த தேர்தலில் தமிழக காங்கிரஸ் எவ்வாறு செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்தே தி.மு.க உடன் தொகுதி உடன்பாட்டில் று கையெழுத்திட்டதாகவும் தெரிகிறது.

இந்தத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்காவிட்டால் காங்கிரஸின் இடத்தை பா.ஜ.க பெற்றுவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள் என அறிவுறுத்தி இருக்கிறார்.

தமிழகத்தில் இரு பெரிய கட்சிகள் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தான் எனக் கூறியுள்ள பா சிதம்பரம், தமிழகத்தில் 3-வது அணியில் தனக்கு நம்பிக்கை கிடையாது எனவும் அது தேர்தலை தீர்மானிக்க கூடிய அணியாக இருக்காது எனவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட போவதில்லை என கூறியுள்ள அவர், ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் அழிந்துவிடாமல் காப்பாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் இருந்தால்தான் பா.ஜ.க.வை தி.மு.க எதிர்க்கும் எனவும் இல்லாவிட்டால் அ.தி.மு.க.வை மட்டுமே தி.மு.க எதிர்க்கும் எனவும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இந்திய அளவில் முக்கியமான ஒன்று எனவும் பா .சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.