January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் மீண்டும் தீவிரமாகும் கொரோனா பரவல்

கொரோனா

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால் பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால், பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆந்திரா,புதுச்சேரி, கர்நாடகா,தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து மற்ற மாநிலங்கள் வழியாக தமிழகம் வருவோருக்கும் இ- பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக ரீதியாக தமிழகம் வந்து 3 நாட்கள்வரை தங்குவோருக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.