January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை முன்வைத்தார் ஸ்டாலின்

திருச்சியில் ‘தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் தி.மு.க.வின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை முன்வைத்துள்ளார்.

துறைகளை சீரமைப்பதே எனது முதல் பணி என தெரிவித்த ஸ்டாலின்,நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், சமூக நீதி இவை உள்ளிட்ட 7 துறைகளை சீரமைப்பது முக்கியமானது எனவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும்,தி.மு.க ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் எனவும் ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார்.

மேலும் மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு முற்றிலுமாக ஒழிக்கப்படும் எனவும்,தமிழகத்தின் பசுமை பரப்பளவை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

அத்துடன்,கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான நிதி உயர்த்தப்படும்.
கல்வி உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி கல்வி உதவித் தொகை இருமடங்கு உயர்த்தி வழங்கப்படும்.மேலும் மாணவர்களின் பள்ளி இடைநிற்றல் சதவீதம் குறைக்கப்படும் எனவும் பத்தாண்டு திட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

அத்துடன் தமிழகத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தப்படும் எனவும் நகர்புறத்தில் புதிதாக 35 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தமது ஆட்சி வந்தால் வழங்கப்படும் எனவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.