November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாம் தமிழர் கட்சி: 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி; 50 வீதமான இடங்களில் பெண்கள்

தமிழகத்தில் இதுவரை எந்த அரசியல் கட்சியையும் வழங்காத அறிவிப்பை, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ளார்.

சம உரிமை அளிக்கவேண்டும் என்பதை கருத்தில்கொண்டு 50 சதவீதம் பெண்களும், 50 சதவீதம் ஆண்களும் வேட்பாளர்களாக களத்தில் இறக்கப்படுவதாக சீமான்  அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் அறிவிக்கும் நிகழ்வு சென்னை ராயப்பேட்டை வை.எம்.சி.ஏ. மைதானத்தில்  இன்று நடைபெற்றது.

இதன் போதே சீமான் இந்த அறிவிப்பை விடுத்தள்ளார்.

திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் தாம் போட்டியிடப்போவதாகவும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிவித்திருக்கிறார்.

இந்நிகழ்வில் பேசிய சீமான் அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டதாக சாடியிருக்கிறார்.

ஆணும், பெண்ணும் சமம் என்பதே தங்களது கொள்கை எனவும் கூறியுள்ளார்.

இந்த சட்டமன்ற தேர்தலில் தங்களது கட்சியில் பெண்களுக்கு 50% கொடுப்பது எங்கள் கடமை என சீமான் தெரிவித்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி சார்பாக 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டாதாகவும் என விமர்சித்துள்ளார்.
இந்த சட்டமன்ற தேர்தலில் ஊழல், லஞ்சத்தை ஒழிப்பதற்காக யாருடனும் கூட்டணி வைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுத்துள்ளதாக சீமான் தெரிவித்திருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி தொடங்கியதிலிருந்தே யாருடனும் கூட்டணி அமைக்காமல் இதுவரை தனித்து நின்று போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இம்முறையும் யாருடனும் கூட்டணி வைக்காமல் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி.