May 14, 2025 12:58:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பாஜக, அதிமுக, பாமக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்’: கன்னியாகுமாரி பிரசாரத்தில் அமித் ஷா

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் மூலமாக தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் பிரசார பயணத்தை தொடங்கியுள்ள அமித் ஷா கன்னியாகுமாரியில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ‘வெற்றி கொடி ஏந்தி வெல்வோம்’ என்ற பாஜக பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், பாஜக, அதிமுக, பாமக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என சூளுரைத்துள்ளார்.

அத்தோடு, கன்னியாகுமாரி மாவட்டத்தில் போட்டியிடும் பொன். ராதாகிருஷ்ணனை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் இந்தத் தேர்தல் மூலம் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.