January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிமுக கூட்டணியில் இருந்து கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகியது

அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகிக்கொள்வதாக அதன் தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.

அதேநேரம், தனது தலைமையில் 84 தொகுதிகளில் தனித்து போட்டியிடவுள்ளதாகவும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

தங்களது சமுதாயத்தினர் இட ஒதுக்கீட்டுக்காக நீண்ட நாட்களாக போராடிக் கொண்டிருப்பதாகவும், அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் கருணாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது அரசியல் இலாபத்திற்காக ஒரு சில சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளதாக சாடியுள்ள கருணாஸ், அண்மையில் ஆளும் அதிமுக அரசு பாமகவிற்கு இட ஒதுக்கீடு அறிவித்திருந்தை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அத்தோடு, எண்ணற்ற மக்களை புறந்தள்ளி சமூக நீதிக்கு தவறிழைத்துள்ளதாகவும் இந்த காரணங்களை அடிப்படையாக வைத்து முக்குலத்தோர் புலிப்படை அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கருணாஸ் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, இரட்டை இலை சின்னத்தில் திருவாடானை தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.