July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்பதுதான் பாஜகவின் திட்டம் என்கிறார் கமல்ஹாசன்

(Photo: Makkal Needhi Maiam/Twitter)

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது பாஜகவின் திட்டம். அவ்வாறு இருக்கும் போது, காங்கிரஸ் கட்சியின் இருப்பை இல்லாமல் செய்துகொண்டிருக்கும் இவர்கள் தான் பாஜகவின் ‘பி’ டீம் என திமுகவை கமல்ஹாசன் மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை மற்றும் கொளத்தூரில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, என்னைப் பார்த்து பாஜகவின் ‘பி’ டீம் என்று கூறுகின்றார்கள். காங்கிரஸ் கட்சியே இருக்கக் கூடாது என்று நினைப்பது பாஜக. அப்படி இருக்கும் போது அதே காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களை கொடுக்கும் கட்சி தானே பாஜகவின் ‘பி’ டீம் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

“அத்தோடு, நாளை வரப்போவது திமுகவா அதிமுகவா என இனியும் வேண்டாம். மக்களாட்சி மலர வேண்டும். அதனால் தான் என் கட்சியின் பெயரை மக்கள் நீதி மய்யம் என வைத்துள்ளேன்.

‘இங்கு ஒவ்வொரு தொண்டனும் தலைவன் தான். பட்டியல் தயாரானவுடன் வேட்பாளர்கள் மக்களை தேடி வருவார்கள். குறைகளை கேட்பார்கள். அதில், எத்தனை நாட்களில் செய்ய முடியும் என்பதை பத்திரத்தில் எழுதி கொடுக்கப்படும். அதில் நான் கையெழுத்து போடுவேன்.

மேலும், காங்கிரஸுக்கு எம்.எல்.ஏ, எம்.பியே இருக்கக்கூடாது என்று அவர்களின் இருப்பையே இல்லாமல் செய்யும் திமுக தான் உண்மையான பி டீம். இது காங்கிரஸ் கட்சிக்கு புரிய வேண்டும்” எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.