(Photo: GKMami/Twitter)
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே செலுத்துவதுடன் 12ஆம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் இன்றைய தினம் தேர்தல் அறிக்கையை சென்னையில் வெளியிட்டுள்ளனர்.
அதற்கமைய பாடசாலையில் இடைவிலகலை தடுக்க 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 500 ரூபா நிதியுதவி வழங்கப்படும் என பாமக உறுதி அளித்துள்ளது.
அத்தோடு பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்வி கடனை அரசே செலுத்துவதுடன் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபா நிதியுதவி வழங்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் ஈழத்தமிழர் பிரச்சனை, நீர் மேலாண்மை, வேளாண்மை, சமூக நீதி, நிர்வாக சீர்திருத்தம், ஊழல் ஒழிப்பு, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மகளிர் நலன், போக்குவரத்து உட்கட்டமைப்பு, மின்சாரம், சிறுபான்மையினர் பழங்குடியினர் நலன் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்றும் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிக சட்டமன்றத்தேர்தலை அதிமுக கூட்டணியுடன் இணைந்து சந்திக்கிறது. பாமக- அதிமுக தலைமையிலான கூட்டணியில் 23 தொகுதிகளில் பாமக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
— G.K.Mani (@PmkGkm) March 5, 2021