July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ளநிலையில் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலை அக்கட்சி தலைமை வெளியிட்டிருக்கிறது.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் , 4 அமைச்சர்களின் பெயர்கள் மற்றும்   தொகுதிகளின் விபரங்கள் என்பன  இந்தப் பட்டியலில் அடங்கும்.

அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

துணை முதலமைச்சர்  ஓ .பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் .

ராயபுரத்தில்  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறார்.

மீதமுள்ள வேட்பாளர்கள் பட்டியல்  குறித்த அறிவிப்பு மிக விரைவில்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.