January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற விடக்கூடாது’

தி.மு.க.வு.டன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என அவர் கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் ,அ.தி.மு.க.வையும் ,தி.மு.க.வையும் தமிழகத்தில் ஒழித்துவிட வேண்டும் என பா.ஜ.க செயல்படுகிறது.

கருணாநிதியும் ,ஜெயலலிதாவும் இல்லாத சூழ்நிலையில் எவ்வாறாவது தமிழகத்தில் கால் பதித்துவிட வேண்டும் என பா.ஜ.க முயல்கிறது.ஆகவே தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற விடக்கூடாது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன் , தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில் நாங்கள் 6 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்திருப்பதாகவும், கட்சியின் உயர்நிலைக்குழு நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்த நிலையிலும் கூட்டணியை தொடர்வதுதான் முக்கியம் என்று முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் மதவாத சக்திகள் உள்ளே வருவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி காரணமாக அமையக் கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருப்பதாக திருமாவளவன் கூறியிருக்கிறார்.