அ.தி.மு.க.வில் விருப்பு மனு அளித்த சுமார் 8,200 பேரில் எம்.ஜி.ஆரின் பேரனும் ஒருவர் என கூறப்படுகிறது.
அ.தி.மு.க சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் மகன் ராமச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், 9 பேர் கொண்ட குழுவினர் நேர்காணலை நடத்துகின்றனர் .
இந்த நேர்காணலில் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் மகன் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
அ.தி.மு.க சார்பில் 3 தொகுதிகளுக்கு விருப்பு மனு தாக்கல் செய்துள்ளதாக ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் .
ஆண்டிப்பட்டி,ஆலந்தூர், பல்லாவரம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருப்பதாக தெரிகிறது.
தொடர்ந்து பேசிய ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர் ஒரு வாழும் மேதை, அவர் வீட்டில் இருந்து வரும் என்னை மக்கள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியிருக்கிறார். எம்.ஜி.ஆரை விரும்பும் அனைவரும் தனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் .
அ.தி.மு.க சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாக கூறியிருக்கிறார் ராமச்சந்திரன்.