திமுகவில் இருக்கும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி ,மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவற்றுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இன்னும் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.
காங்கிரஸ் சார்பில் 27 தொகுதிகள் கேட்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் திமுகவோ 18 தொகுதியில் இருந்து தற்போது 22 தொகுதிகளில் தான் தர முடியும் என்ற நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகள் வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பான இழுபறி நிலை நீடிப்பதுடன், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.