
இந்தியாவின் உத்தரப்பிரதேச ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ் மஹால் கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம நபரொருவர் தொலைபேசி மூலம் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்தை தொடர்ந்து அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, அங்கு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டடத்தின் இடமொன்றில் குண்டு பொருத்தப்பட்டுள்ளதாகவும், அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும் உத்தரபிரதேச காவல்துறையின் அவசர உதவி இலக்கமான 112 க்கு நபரொருவர் இன்று காலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போது தாஜ் மஹால் தற்காலிமாக மூடப்பட்டுள்ளதுடன், அங்கு வெடிகுண்டு சோதனைப் பிரிவினர் தொடர்ந்தும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை உத்தரபிரதேச காவல்துறையினர் அந்தப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கையெடுத்துள்ளனர்.