மக்கள் நீதி மய்யம், மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக் கட்சி ஆகியவற்றின் கூட்டணியில் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக சரத்குமார் அறிவித்திருக்கிறார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக் கட்சி ஆகியன கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது என சரத்குமார் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சரத்குமார் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
மக்கள் விரும்பும் கூட்டணியாக இது இருக்குமென கூறியுள்ள சரத்குமார் இந்தக் கூட்டணி கொள்கை ரீதியாக ஒன்று சேர்ந்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
சமத்துவம் இல்லையென்றால் நாடு வீணாய் போகும் என கூறியுள்ள அவர் மக்களுக்காக சிந்திக்க வேண்டும். ஓட்டுக்காக சிந்திக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார், ராதிகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.வில் இருந்து விலகிய, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக் கட்சியினரும், கடந்த சில நாட்களுக்கு முன்னர்மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.